Wikipedia
Search results
Thursday, August 4, 2016
சிறந்த 10 Internet Browser-கள்!
இணைய உலவி என்று தமிழில் சொல்லப்படும் Browsersகள் தான் நாம் இணையத்தை பயன்படுத்தும் நேரங்களில் வேகத்தை தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் மிகப் பிரபலமான Browsers கூட நமக்கு Crash ஆகி பிரச்சினையை தரும். அந்த நேரங்களில் நமக்கு ஒரு மாற்று அவசியம். இந்தப் பதிவின் மூலம் பத்து சிறந்த Browser-களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இதில் சில ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயம் ஆனவை தான்.
1. Google Chrome
அறிமுகம் செய்த சில ஆண்டுகளிலேயே மிகப் பிரபலம் ஆன Browser என்றால் அது Google Chrome தான். வெறும் 4 செகண்ட்களில் இது உங்கள் முகப்பு பக்கத்தை திறந்து விடும். Open-Source Development வசதி கொண்ட மிகச் சில பிரவுசர்களில் இதுவும் ஒன்று.
2. FireFox
நெருப்பு நரி என்று செல்லமாய் அழைக்கப்படும் இது தான் இணையத்தில் பெரும்பாலோனோர் விருப்பம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 6.3 நொடிகளில் திறக்கும் திறன் வாய்ந்தது. இதன் Patent Controls வசதி நம் தேடுதல் முடிவுகளை கட்டுபடுத்துகிறது. Open-Source Development வசதி இதிலும் உள்ளது.
3. Internet Explorer
Windows கணினிகளில் Default ஆக வரும் Browser இது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.3 நொடிகளில் திறக்கிறது. மற்றபடி மிக அதிகமான Option களை கொண்டிருப்பது இதன் பலவீனம் எனலாம்.
4. Opera
மொபைல்களில் மிக அதிகமானோர் பயன்படுத்தும் இது, கணினிகளிலும் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் முகப்புப் பக்கத்தை திறக்க 5.1 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. Mouse மூலம் Shortcut வசதி தரும் சில Browserகளில் இதுவும் ஒன்று. அத்தோடு இந்த பட்டியலில் Voice கட்டளைகளை கொண்டு Search வசதி கொண்ட ஒரே Browser இதுதான்.
5. Safari
Apple நிறுவனத்தின் தயாரிப்பான இது Windows கணினிகளிலும் இயங்குகிறது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.2 நொடிகளில் திறக்கிறது. மிக பார்வைக்கு மிக அழகாக தெரியும் இது சில நேரங்களில் நீ என்ன சொல்வது நான் என்ன செய்வது என்று முரண்டு பிடித்து நின்று விடுவது இதன் பலவீனம்.
6. Maxthon
Maxthon Browser Chrome மற்றும் Firefox க்கு சிறந்த மாற்று. மிகச் சிறந்த வேகம் கொண்ட இது 8 நொடிகளில் உங்கள் முகப்பு பக்கத்தை திறக்கிறது. பயனரின் விருப்பத்துக்கு ஏற்ப Theme தருவது இதன் சிறப்பு. Automatic Update வசதி இல்லாதது இதன் சின்ன குறை.
7. RockMelt
இது Browser இல்லை Wowser என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப் பட்ட இது மிக மிக மிக அருமையான ஒரு பிரவுசர். இது உங்கள் முகப்பு பக்கத்தை திறக்க 9.5 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகள் இதன் காரணம் என்றாலும், அதன் பின்னான இதன் வேகம் மிகவும் அருமை. நிச்சயமாக Wowser தான் இது.
8. SeaMonkey
Firefox பயனாளிகளுக்கு நல்ல மாற்று என்றால் அது SeaMonkey தான். Mozilla நிறுவனத்தின் Source Code களை இது பயன்படுத்துவது அதன் காரணம் எனலாம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 5.7 நொடிகளில் திறக்கிறது.Open-Source Development வசதி இதிலும் உள்ளது.
9. Deepnet Explorer
Internet Explorer பயனர்களுக்கு மாற்று என்றால் இது எனலாம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.1 நொடிகளில் திறக்கிறது. Starting Page ஆக ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் வைக்க முடிவது இதன் ஒரு சிறப்பு.
10. Avant Browser
சீனத் தயாரிப்பான இது IE9 போன்ற வேகத்தில் இயங்குகிறது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 6.6 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. முந்தையது போல நிறைய Home Page களை வைத்துக் கொள்ள முடிந்தது இதன் ஒரு சிறப்பு.
நீங்கள் ஒரு பதிவர் என்றால் Chrome, Firefox க்கு ஒரு மாற்று வேண்டும் என்று நினைத்தால். IE, Rockmelt போன்றவற்றை பயன்படுத்தவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment